காலையில் அடுப்பறைக்கு சென்றவுடன் தோன்றியது . இன்று மறக்காமல் குப்பையை போய் கொட்ட வேண்டும். அலுவலகத்துக்கு செல்ல பல்சர்- ஐ உதைத்தேன். ஒரு கையில் குப்பை பையை வைத்துக்கொண்டு ஓட்டுவது கொஞ்சம் சிரமமதான் இருந்தது . நான் நார்மலாக வண்டியை ஓட்டிக்கொண்டே குப்பைதொட்டி இடம் வந்தவுடன் வண்டியை நிறுத்தாமல் கரெக்டாக குப்பைதொட்டிக்குள் எறிந்து விட்டு சென்று விடுவேன். இன்றும் அப்படியே செய்ய நினைத்தபோது கொஞ்சம் நெருடல்.
ஒரு வயதான பாட்டி குப்பையை கிளறி கொண்டு இருந்தாள். பால் பாக்கெட்டின் கவர்களை தேடி எடுத்து கொண்டு இருந்தாள். வழக்கம் போல் குப்பையை தூக்கி எறியாமல் நின்று நிதானமாக குப்பையை கிழே வைத்து விட்டு வந்தேன்.
அந்த பாட்டிய நினைக்கும்போது ஏதோ இனம் புரியாமல் கொஞ்சம் மனது கனமாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
படித்த எங்களுக்கும் தான்.
ReplyDeleteசொல் சரிபபார்ப்பை நீக்கிவிடுங்கள் பாஸ்.
ReplyDeleteதொடர்ந்து எழுத வாழ்த்துகள்.