போன வார வெள்ளிகிழமை என்அப்பா ஊரிலிருந்து பெங்களூர்க்கு வந்திருந்தார். பந்த் நாளன்று ஊருக்கு கிளம்பவேண்டும். பெங்களூர் காலை நியூஸ் சேனலில் பஸ்கள் வழக்கம் போல் ஓடி கொண்டு இருக்கின்றன என்று பிளாஷ் நியூஸ் சொல்லியது. சரி இங்க பந்த் ஒன்னும் அவ்வளவு பிரச்சினை இல்ல போலும் நினைத்து கொண்டு MADIWALA BRIDGE கிட்ட வந்த போது பார்த்தால் ஒரு பஸ் காணோம். சரி HOSUR-ல போய் விட்டுத் வரலாம்னு வண்டி எடுத்துட்டு போன, பய புள்ள BOMMANAHALLI BRIDGE கிட்ட திருப்பி அனுப்புறான். ஒரே கடுப்பு. கிளம்பும்போதே ஒரு டவுட்டு. கர்நாடகவுல தான் பிஜேபி ஆட்சி நடக்குதே. நியூஸ்ல (NDTV 24X7 10.30AM) பஸ் எல்லாம் ஓடுதுன்னு எப்படி சொல்றங்களே-னு தெரியல. சரி கிளம்பி போயிட்டு வருவோம்னு பார்த்தா வண்டிய மறிச்சி திருப்பி அனுப்றாங்க.
எங்க அப்பா வேற "இரு இருன்னு இருக்க வெச்சுட்ட. இப்ப பாரு அவஸ்தைய". அவருக்கு அவர் பாடு. அவருக்கு நைட் டூட்டி போகணும். 8.30 ikku சங்ககிரில இருக்கணும்னு சொல்லிட்டாரு. சரி ஒருவழியா மதியம் 2.30 பெங்களூர்- ஜோலார்பேட் brindhaavan எக்ஸ்பிரஸ்-லும் 5.30 க்கு ஜோலார்பேட் - சேலம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்-லும் unreserve டிக்கெட் எடுத்து அனுப்பிவிட்டேன். நைட் ஏழரை மணிக்கு சேலத்துல இருப்பாருன்னு கணக்கு பண்ணி அனுப்பியாச்சு. ரயில்வே கழகத்துக்கு மிக்க நன்றி.
நான் அவுட்டர் ரிங் ரோட்ல போகும் போது நிறைய பேரு பஸ் ஸ்டாப்பில் பஸ் வருமானு காத்து கிடந்தது பாவமா இருந்தது. சில பேரு இது வேலைக்கு ஆகாதுன்னு நடராஜா பயணம் செய்து கொண்டு இருந்தார்கள்.
அவன் அவனுக்கு என்ன முக்கியமான வேலையோ பாவம். பஸ் இல்லாமல் திணறி கொண்டு இருந்தார்கள்.
சில பேர் போற வர வண்டிகளிடம் லிப்ட் கேட்டு கொண்டு இருந்தார்கள்.
இதற்கு எல்லாம் யார் காரணம்?
ஆளும் கட்சியா இருந்தால் என்ன? எதிர் கட்சியா இருந்தால் என்ன?
காசு கொடுத்து ஆட்களை வெளியூரிலிருந்து காசு கொடுத்து ஆட்களை வண்டி வண்டியா கூட்டி
வந்து விடுகிறார்கள் .ஒரு கட்சி பந்த் என்று அறிவித்து விட்டால் மாநிலத்தில் மற்ற பகுதிகளில் இருந்து எதற்காக மாநிலத்தின் தலை நகரை நோக்கி கட்சி தொண்டர்கள் படை எடுக்க வேண்டும்? அப்புறம் குடுத்த காசுக்கு வண்டி கண்ணாடிய உடைக்கிறதும் கொளுத்தரதும் செய்கிர்ரார்கள்.
விளைவு: 13000கோடி ரூபாய் இழப்பு மக்கள் பணம் மற்றும் நேர விரயம்.
ஆனாகஷ்ட பட போறது சாதாரண மக்கள்தான்.
காசு கொடுத்த பரதேசியும் மக்களை பத்தி கவலை பட போறதில்ல. . காசு வாங்கின பரதேசியும் மக்களை பத்தி கவலை பட போறதில்ல.
அரசுக்கு ஒரு எதிர்ப்பை போக்குவரத்தை நிறுத்தி தான் காட்டவேண்டுமா?
ஒரு பெட்ரோல் விலை ஏற்றத்திற்கான எதிர்ப்பை
உனக்கு சொந்தமான
வண்டியின் ஒரு நாள் பெட்ரோல் போடாதே. அல்லது
பொது போக்குவரத்து பயன்படுத்து அல்லது
கடையை ஒரு நாள் மூடி கொள் அல்லது
ஏதோ ஒரு வகையில் உனக்கு சொந்தமான பொருள்களின் மீது எதிர்ப்பை காட்டு.
அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மக்களுக்கு உதவுவதற்கு தான். ஆனால் பெயருக்கு அர்த்தமே இல்லாமல் பஸ்கள்லையே கொளுத்துவது மிக பெரிய கொடுமை. நாடு முழுவதும் ஒரு நாள் பெட்ரோல் விற்க வில்லையென்றால் ஆயில் கம்பெனி களுக்குதான் நஷ்டம். இதுவே போக போக நடைமுறை ஆனால் ஆயில் கம்பெனிகள் பெட்ரோல் விலையை குறைத்து தான் ஆக வேண்டும் . ஏனெனில் தேவை அதிகம் இல்லையென்றால் விலை குறைத்து தான் ஆக வேண்டும்.
எடுத்துகாட்டாக அமெரிக்க மக்கள் கச்சா ஆயில் விலை அதிகமான போது (110௦$) மக்கள் பொது போக்குவரத்து அதிகம் பயன்படுத்த தொடங்கினார்கள். பின்னர் கச்சா ஆயில் விலை குறைந்தது. தேவையை நாமே கூட்டி கொள்வதால் வந்த வினை இது.
பந்த் எனில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து- ஐ தடங்கல் செய்யாமல் எதிர்ப்பை காட்ட வேண்டும். அதுவே நல்ல கட்சிக்கு அழகு ( இது நடக்குமா?)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment