Tuesday, July 6, 2010

மொக்கை 07-07-2010

என்ன செய்வதென்று புரியவில்லை. மணி பார்த்தேன் 12.50. அதற்குள் மதியம் ஆகிவிட்டதா என்று தோன்றியதும் லேசாக பசி வயிற்றை கிள்ளியது. தினமும் சவுத் இந்தியன் மீல்ஸ் காண்டீன் சாப்பாடு போரடித்தது. சரி இன்னிக்கி pizza சாப்பிட்டு பாப்போம் என்று கிளம்பினேன். PIZZA CORNER - ஸ்டால்-க்கு சென்றேன் . what do you want sir? என்று அழகான ஆங்கிலத்தில் கேட்டான். நானும் மெனு போர்டை பார்த்துவிட்டு ஒரு மினி பஞ்சாபி சிக்கன் வித் ட்ரிங் என்றேன் . பில் போட்டான். சுளையாக 108 ரூபாய் பில் வந்தது. sir, it will take 15-20 min to deliver என்றான். நானும் ok என்றேன். pizza-வும் வந்தது. பார்த்தா ஒரு குட்டி தோசை மாதிரி. ரெண்டா மடிச்சி வாயில போடற மாதிரி சைஸ். இது பத்துமான்னு மண்டைக்குள்ள கேள்வி வேற. நாலே நாலு குட்டி பீஸு. வாயில போட்ட மாத்திரமும் தெரியல வயத்துக்குள்ள போன மாயமும் தெரியல. சரி வயிறு புல்லா pizza சாப்பிடனும்னா 350 ரூபாய் காலி ஆயிடும். சரி கிளம்பினேன் 33 ரூபாய் சவுத் இந்தியன் மீல்ஸ் கவுன்டருக்கு

No comments:

Post a Comment